சாதகமான மட்டத்தை அடைந்துள்ள நாணய மாற்று வீதம்! மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் முதலாவது மீளாய்வுச்செயன்முறை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன்பின்னர் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் மறுசீரமைப்புக்கள் என்பன தொடர்பான நிபந்தனைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதாரக் குறிகாட்டிகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாக முன்னேற்றமடைந்து வருகின்றபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தினால் மதிப்பிடப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஆய்வின் பிரகாரமே கடன்மறுசீரமைப்புச்செயன்முறை முன்னெடுக்கப்படும்.
இலக்குகள் அடையப்பட்டுள்ளன
சர்வதேச நாணய நிதியத்தின் பெரும்பாகப்பொருளாதார செயற்திட்டத்தில் எதிர்வுகூறப்பட்டதை விடவும் மிக வேகமாக நாட்டின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருப்பதுடன், நாணயமாற்றுவீதமும் சாதகமான மட்டத்தை அடைந்திருக்கின்றது.
அதேபோன்று கடந்த மார்ச் மாதம் அடையப்படுமென எதிர்பார்க்கப்பட்ட சில பொருளாதார இலக்குகள் உரிய காலப்பகுதியில் அடையப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு மேலும் சில இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டியிருக்கின்றது.
அதேபோன்று இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் முதலாவது மீளாய்வுச்செயன்முறை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன்பின்னர் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் மறுசீரமைப்புக்கள் என்பன தொடர்பான நிபந்தனைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படக்கூடும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri