நாட்டைப் பற்றிய வெளிநாடுகளின் தவறான அணுகுமுறைக்கு அரசியல்வாதிகள் காரணமல்ல
நம் நாட்டைப் பற்றி வெளிநாடுகளில் உள்ளவர்களின் தவறான அணுகுமுறைக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்ல எனவும் விளையாட்டுத் திறமையை வளர்த்துக் கொள்ளும் பிள்ளைகளைப் போன்று நாட்டை நேசிக்கும் சிறுவர்கள் குழுவை உருவாக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் "விளையாட்டு வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை" அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (10.02.2023) நடைபெற்ற நிகழ்வின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மாகாண குழு மாகாண ஆளுநர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் தேசிய மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் பிராந்திய மட்டத்தில் ஒரே நேரத்தில் குழுக்கள் நிறுவப்படும்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர்,
தேசிய மட்டம்
விளையாட்டுத்துறை அமைச்சர் மாகாணத்துக்கு மாகாணம் சென்று விளையாட்டை உயர்த்துவது காலத்தின் தேவை என நினைக்கிறேன்.
குறிப்பாக எமது மாகாணத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச மட்ட விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்யும் பொருளாதார நிலை எமது மாகாணத்தில் உள்ள பெற்றோர்களிடம் இல்லை.
எனவே, எமது மாகாணத்தில் இருந்து விளையாட்டு வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு வர வேண்டுமானால் அந்த குறைந்தபட்ச பிரச்சினைகளை தீர்க்க சில உதவிகள் தேவை எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விளையாட்டு மைதானங்கள்
கிழக்கு மாகாணத்தில் 363 மைதானங்கள் உள்ளன, அவற்றுள் விளையாட்டு விழா நடத்தக் கூடிய 05 விளையாட்டு மைதானங்கள் மட்டுமே உள்ளன.
அவற்றில் 400 மீட்டர் போட்டிகளை நடத்தக்கூடிய ஒரு மைதானம் கூட இல்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு
அமைச்சின் செயலாளர், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தேசிய விளையாட்டு சபையின்
தலைவர், தேசிய விளையாட்டு சம்பியன் சுசங்க ஜயசிங்க, தேசிய உதைபந்தாட்ட
சம்மேளனத்தின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா மாகாண
தலைமைச் செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து
கொண்டிருந்தனர்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
