அரச ஊழியர்களுக்கான விடுமுறை: வெளியானது விசேட சுற்றறிக்கை
விசேட சந்தர்ப்பத்திற்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அதிகபட்சமாக 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்
இந்த விடுமுறைக்காக விண்ணப்பிக்க, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது 10 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் உண்மையான நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நிரந்தர அரசாங்க ஊழியர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதற்காக அதிகபட்சமாக 4 மாதங்களுக்கு ஊதிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு மற்றும் ஊதியம் இல்லாத விடுமுறை என விடுமுறை எடுக்க முடியும்.
இந்த சுற்றறிக்கையானது இந்த ஆண்டு ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
