சேதனப் பசளைகளை பயன்படுத்தி விளைச்சல் குறைவாக ஏற்பட்டால் நட்டயீடு: சிவநேசதுரை சந்திரகாந்தன்
சேதனப் பசளை, கூட்டுப் பசளை என்பவற்றை பயன்படுத்தி விளைச்சல் குறைவாக ஏற்பட்டால் அதற்கான நட்டயீட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
சேதனப் பசளை மற்றும் கூட்டுப் பசளை மூலம் விவசாய செய்கை செய்வது தொடர்பில் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள சந்தேக நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சில இடங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊடகங்களின் கருத்துக்களை வைத்து அரசாங்கம் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்யும் என்று விவசாயிகள் எண்ணுகின்றார்கள்.
இதனை விட்டு நீங்கள், உங்களிடம் இரண்டு அல்லது ஐந்து ஏக்கர் நிலம் இருந்தால் சேதனப் பசளை, கூட்டுப் பசளை என்பவற்றை உற்பத்தி செய்வதற்காக வீட்டில் உள்ள பொருட்களை சேகரித்து மேற்கொள்ள முடியும்.
அத்தோடு உங்கள் கிராமங்களில் விவசாய திணைக்களத்தினால் நடத்தப்படும் பயிற்சியில் கலந்து கொண்டு உங்கள் வயல்களுக்கு தேவையான உற்பத்திகளை செய்து கொள்ள முடியும்.
இதற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை அரசாங்கம் வழங்கவுள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
தாங்கள் சேதனப் பசளை, கூட்டுப் பசளை என்பவற்றின் மூலம் விவசாய செய்கை செய்யப்பட்டு விளைச்சல் குறைவாக ஏற்பட்டால் அதற்கான நட்டயீட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒருமுறை மாத்திரம் விளைச்சல் குறைவாக காணப்படும். பின்னர் விளைச்சல் அதிகரித்து காணப்படும். வயல் நில மண் இயற்கையினை மாற்றிக் கொண்டு எங்களுக்கு நஞ்சற்ற உணவினை பாரிய விளைச்சலுடன் தரும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
இதன் மூலம் மூதாதையர்கள் செய்த விவசாயத்தினை மேற்கொள்ள முடியும் என்று அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam