அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!
நாட்டில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நலன்புரி பயன் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.
நான்கு பிரிவுகளின் கீழ் இவ்வாறு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், மிகவும் வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் அடையாளம் காணப்படும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருடங்கள் வரை மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

நிவாரணம் வழங்கும் நலன்புரி பயன் வேலைத்திட்டம்
வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் எட்டு இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருடங்கள் வரை மாதாந்தம் எட்டாயிரத்து 500 ரூபா வழங்கப்படவுள்ளது.
அவதானத்திற்கு உள்ளானவர்கள் என்ற பிரிவின் கீழ் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கப்படும்.
சாதாரண பிரிவின் கீழ் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இரண்டாயிரத்து 500 ரூபா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பயனாளிகளை வலுவூட்டுவது
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri