“கோல்டன் கேட் கல்யாணி பாலத்தின் தனியுரிமையை பதிவு செய்ய தற்போதைய அரசாங்கம் முயற்சி”
நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட களனி பாலத்தின் தனியுரிமையை பதிவு செய்ய தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த திட்டம் 2012ம் ஆண்டு வீதித் திட்டத்திற்கு அமைவாக இருந்த போதிலும், 2014ம் ஆண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு 2016ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
ஆனால், பல்வேறு இடையூறுகளால் திறக்க முடியவில்லை என்றார். திறப்பு விழா குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கம் அதன் பிரத்தியேக உரிமைகளை பறிப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் திறந்து வைப்பதாகவும், இந்த அரசாங்கம் எந்தப் பணிகளையும் செய்யவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam