நீதிமன்றை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்! நாமல் காட்டம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பனவற்றை கடுமையாக அரசியல் மயப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கிறிஷ் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் வழக்கு விசாரணை ஒன்றிற்காக இன்று முன்னிலையான போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வாக்குறுதி
நீதிமன்றையும் பொலிஸ் திணைக்களத்தையும் சுயாதீனமாக இயங்கச் செய்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவ்வாறான நிலையை அவதானிக்க முடியவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் தமக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணைகளுக்காகவே அடிக்கடி தான் நீதிமன்றத்தில் முன்னிலையாவதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நிறுவப்படும் நிதி குற்றவியல் விசாரணை பிரிவிலும் தான் முன்னிலையாக நேரிடும் என தெரிவித்துள்ளார்.
யாருமே நெருங்க முடியாத ஈரானின் நிலக்கீழ் தளங்கள்: தகர்க்க விரும்பும் அமெரிக்காவின் அதிரடித் திட்டங்கள்!!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |