சுகாதாரப் பணியாளர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி வழங்குவது நியாயமானதே என்கிறது அரசாங்கம்
சுகாதாரப் பணியாளர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி வழங்குவது நியாயமானதே என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரன இது குறித்து இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும், இது ஏற்புடையதல்ல எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
சுகாதார அமைச்சின் தடுப்பூசி விநியோக பொறிமுறைக்கு முரணான வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது குடும்ப அங்கத்தினருக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களது குடும்ப அங்கத்தினருக்கு தடுப்பூசி ஏற்றுவது நியாயமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்பாதுகாப்பு அடிப்படையில் முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam