16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை பணியில் இருந்து நீக்கும் இலங்கை அரசாங்கம்
16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார்.
16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சரியான அறிவிப்பை வழங்காத வெளிநாட்டில் இருப்பவர்களும் தத்தமது சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தானாக முன்வந்து சேவையை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கு இணங்க தற்போது இராணுவப் பேச்சாளர் உட்பட இதுவரை 16,141 பேர் அதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
