தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன ஆகியோர் இணைந்து இந்த வாரம் தேங்காய் இறக்குமதி தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க இருந்தனர்.
எனினும், தேங்காய் இறக்குமதி தொடர்பான மீள்பரிசீலனையின் காரணமாக அந்த முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.
தேவையை பொருத்து இறக்குமதி
இந்நிலையில், இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களான தேங்காய் தூள் மற்றும் தேங்காய் பால் என்பவற்றை இறக்குமதி செய்யும் அமைச்சரவை அனுமதிப் பத்திரம் இருப்பதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆய்வின் படி, தேங்காய் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தோனேசியா பொருத்தமான நாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேவையை பொருத்து, குறித்த தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri