கொஞ்ச காலத்தில் வெடிக்கவுள்ள அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்த அரசாங்கமும் கொஞ்ச காலத்தில் வெடிக்குமோ என்று தெரியவில்லை என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
எரிவாயு பிரச்சினையை உடன் அடையாளம் கண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்பொழுது இந்தப் பிரச்சினையை தீர்ப்பது என்பது சற்றே கடினமான விடயமாகும்.
இவ்வாறான விடயங்கள் அரசாங்கமொன்றினால் செய்யக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். இன்னும் கொஞ்ச காலத்தில் அரசாங்கமும் வெடிக்குமொ என்னவோ தெரியவில்லை.
இந்த அரசாங்கம் தொடர்பில் ஓர் விதமான வருத்தம் உள்ளது. உண்மையாகத்தான் நான் கூறுகின்றேன். 2019ம் ஆண்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது இவ்வாறான ஓர் நிலைமையில் இருப்பதற்காக? எங்களுக்கு இது தொடர்பில் மெய்யாகவே வருத்தம் உள்ளது.
தற்போதைய நிலையை அவதானித்தால் புதிய தரப்பு ஒன்று ஆட்சி அமைக்கும் என்று நான் நினைக்கின்றேன் என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
