ஊழல் - மோசடிகளுக்கு எதிராக அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை
ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகளுக்கு எதிராக அரசாங்கம் வலுவான, தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்வாதிகள் சட்ட விடயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. என்றாலும், மோசடி, ஊழல் அல்லது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவரும் பொறுப்புக்கூறப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை அரசாங்கம் அனுப்பியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உறுதிப்பாடு கொள்கைக்கு அப்பாற்பட்டது என்றும், கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை பிரதிபலிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan