ஓய்வு பெறும் அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
2023ஆம் ஆண்டுக்கான ஓய்வு வாழ்க்கை சான்றிதழை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்கும் முறைக்கு பதிலாக கிராம சேவகர் மட்டத்தில் அனைத்து ஓய்வுதியக்கார்களையும் ஒரே விண்ணப்ப படிவத்தின் ஊடாக வாழ்க்கை சான்றுகளை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தொழிலிருந்து ஓய்வு பெறுவோர்கள் கிராம உத்தியோகத்தரிடம் அடையாள அட்டையை சமர்ப்பித்து தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட படிவத்தில் தனக்குரிய இடத்தில் தனது வாழ்க்கை பற்றிய விடயங்களை உறுதிப்படுத்தலாம்.
ஓய்வூதியம் பெறும்
அனைவரும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது வாழ்க்கை பற்றிய சான்றுகளை
புதுபிக்க வேண்டும் என்று ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
