அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி
மூன்று மாதங்களில் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இடை நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாகவும் புதிய முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற இணைப்புக்குழுவின் தலைவர் பதவியின், கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தீர்மானங்கள்
நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடத்தி தெளிவான தீர்மானங்களை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துள்ளதாக தெரிவித்து வந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், பங்குச் சந்தை திடீர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.