அரிசி தட்டுப்பாடு: அரசாங்கம் விசேட நடவடிக்கை
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 65,000 மெற்றிக் தொன் அரிசியானது இறக்குமதி செய்யப்படவுள்ளது.
நாட்டின் அரிசி நெருக்கடி தொடர்பில், அரிசி இறக்குமதியாளர்களுக்கும், சதொச உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் பெரும்போக நெல் அறுவடை வரை அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரிசி நெருக்கடி
அரிசி நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டுக்குத் தேவையான அளவு அரிசி நாட்டிற்குள்ளேயே இருப்பதாகவும், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |