கல்முனையில் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!
பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக கல்முனை (Kalmunai) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (20 ) அதிகாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குறித்த சந்தேக நபரை 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அத்துடன் குறித்த சந்தேக நபர் ஏலவே கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொருவருடன் கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் வைத்து கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டிருந்தார்.
.கைதான சந்தேக நபர் கல்முனை குடி மதிரிஸா வீதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளையின் தந்தை என்றும் கடந்த நவம்பர் மாதம் (11) ஆந் திகதி ஐஸ் போதையுடன் ஏலவே அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரை இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
