நீதித்துறைக்கு அரசாங்கம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் விசனம் (Video)
நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா விவகாரம் தொடர்பில் யாழில் இன்று (30.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே, நீதியை நடைமுறைப்படுத்தும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே யாராவது நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீதிபதிக்கு தொல்லைகள் கொடுக்கக் கூடாது.
ஆனால் இலங்கையில் நடைபெறுவது இவ்வாறான செயற்பாடுகள் அல்ல எல்லாமே ஒரு சிங்கள பௌத்த சிந்தனையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள முழுமையான கருத்துக்கள் பின்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
