இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச சேவைகள்!
கோவிட் தொற்றுநோய் காரணமாக மூன்று மாதங்களாக முடங்கியிருந்த பொது சேவை இன்று முதல் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக, அரச ஊழியர்களை தேவைக்கேற்ப பணிக்கு அமர்த்தும் அதிகாரம் ஏப்ரல் 27 முதல் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி ஒரு சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, நிறுவனத் தலைவர்கள் மாதத்தில் எட்டு நாட்கள் பொது ஊழியர்களை அழைக்க அதிகாரம் பெற்றனர். தேவைப்படும்போது வாரத்தில் மூன்று நாட்கள் வேலைக்கு அழைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பொதுச் சேவையில் கர்ப்பிணித் தாய்மார்களை அழைப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. கர்ப்பிணித் தாய்மார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான தொற்றுநோய் சூழ்நிலையால் அச்சுறுத்தப்படுவதாகவும் சுகாதார சேவைகள் இயக்குனர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் தடுப்பூசி போடப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டு பொது சேவையை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தது.
இதன்படி, பொது சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
