நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாத பட்டியலில்...!

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Chandramathi Jul 21, 2023 11:56 AM GMT
Report

மன்னாரமுது அஹ்னாப் என தமிழ் வாசக சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசிம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபராக இலங்கை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.

2023 ஜூன் 8 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

"அவ்வப்போது திருத்தப்பட்டு ஆகஸ்ட் 1, 2022 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2291/02 இல் வெளியிடப்பட்ட, 21 மார்ச் 2014 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 1854/41இல் வெளியிடப்பட்ட நபர்கள் பட்டியலில் இறுதியாக திருத்தங்கள் செய்யப்பட்ட, குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலின் உப அட்டவணையை நீக்கி பின்வரும் அட்டவணைகளை மாற்றுவதன் மூலம் மேலும் திருத்தப்பட்டுள்ளது.” என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாத பட்டியலில்...! | Government S Terror List In Sri Lanka

பயங்கரவாத பட்டியல்

ஆகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு அதில் அஹ்னாப் ஜசீமின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கையின் அதிகார வர்க்கத்தினருக்கும் புன்னியம் கிடைக்கும் வகையில், அஹ்னாப் ஜசீம் தற்போது தொழிலின்றி விவசாயம் செய்து வருவதாக மன்னாரமுது அஹ்னாபின் சட்டத்தரணி சஞ்சய் வில்சன் குணசேகர டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"UNWGAD அவரது கைது மனித உரிமை மீறல் என அடையாளம் கண்டுள்ளது." என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

UNWGAD என்பது தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகளின் பணிக்குழு ஆகும்.

2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US