கிழக்கை அழித்து மணலாற்றால் ஊடறுக்கும் இரகசிய நகர்வு
வடகிழக்கு எனும் தமிழர் தாயகத்தை இரண்டாக பிரிப்பதற்கான வழியாகவே மணலாற்றில் அரசினால் இரகசியத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவிலிருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு,கிழக்கின் கழுத்து பகுதி இரகசிய திட்டங்களால் துண்டாடப்படுகின்றமை தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர் தாயகத்தை துண்டாடுவது தான் சிங்கள தேசத்தின் இலட்சியமாக உள்ளது.இதற்கு தந்தையாக டி.எஸ் சேனாநாயக்கா செயற்பட்டார்.
இதன் காரணமாகவே மணலாறு எனும் தமிழர் தாயக பகுதி வெலிஓயா எனும் பெயரில் மாற்றப்பட்டு விவசாய குடியேற்றம்,மீனவ குடியேற்றம் என்ற போர்வையில் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவை அரசினுடைய படை சார்ந்த இராணுவ குடியேற்றங்களாகவே மாற்றினர்.இதன் காரணமாகவே, மணலாற்றில் அரசினால் முன்னெடுக்கப்படும் இரகசியத் திட்டங்கள் இந்தியாவிற்கு பெரும் ஆபத்தாகவே அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
