யுத்த காலத்தில் மீட்க்கப்பட்ட நகைகள்! மைத்திரி அரசாங்கத்தில் முரணான அறிக்கை
இலங்கையின் உள்நாட்டு யுத்த காலத்தில் தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள், அதற்கான ஆதாரமாக அடகுச்சீட்டுக்களை வைத்துக்கொண்டு இன்றுவரை நெடு நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி வரலாற்றை கொண்ட தேசிய மக்கள் சக்தி அணி அந்த நகைகளை வெளி உலகுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது.
குறிப்பாக அண்மையில் இராணுவத்தின் வசம் இருந்த அந்த நகைகள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் உறுதியளித்தது.
மீட்க்கப்பட்ட நகைகள்
முன்னதாக யுத்த காலத்தில் மீட்க்கப்பட்ட நகைகளும் பணங்களும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகசவினது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற நிகழ்வில் சிறீதரன் எம்.பி பகிரங்கப்படுத்தியிருந்தார்.
ஆனால், இன்று வரை அந்த மக்கள் தங்கமும் நகையும் கிடைக்காமல் அவை கிடைக்குமென காத்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இந்த ஊழலுக்கு என்ன விசாரணை? யார் விசாரிக்கப் போகிறீர்கள்? எனவும் அப்போது கேள்விகளை எழுப்பியிருந்தார்.
மேலும், குறித்த நகைகள் தொடர்பில் 2016.09.03 அன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தற்போதைய ஜனாதிபதி எழுப்பிய கேள்வி பின்வருமாறு அமைந்திருந்தது.
150 கிலோ கிராம் தங்கம்
“150 கிலோ கிராம் தங்கத்தில் 32 கிலோ கிராம் தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 80 கிலோ கிராம் தங்கம் இராணுவத்தினரிடம் இருந்தால் ஏனைய 40 கிலோ கிராம் தங்கத்திற்கு என்ன நடந்தது எனவும் கேள்வியெழுப்பினார்.”
இதன்படி அன்றைய விவாதம் பின்வறுமாறு அமைந்திருந்தது,
வடபகுதியிலுள்ள தமிழ் மக்களிடமிருந்து தங்க நகைகளை மீட்பதற்காகவா இராணுவம் இறுதிக்கட்ட யுத்ததில் ஈடுபட்டது.
இறுதிக்கட்ட யுத்ததில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவம் வெற்றி கொண்டதன் பின்னர் 40 கிலோ கிராம் தங்கத்தை மீட்டது.
ஆனால் அவ்வாறு மீட்கப்பட்ட தங்க நகைகள் எதற்காக எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென அவர் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயசிங்க இராணுவத்தினரால் மீட்க்பட்ட தங்க நகைகள் தொடர்பில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ரணில் விக்ரமசிங்க
இதற்கு பதிலளித்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
வடக்கிலிருந்து 150 கிலோ கிராம் தங்க நகைகளை இராணுவம் கைப்பற்றியது. அதில் 32 கிலோ கிராம் தங்கம் மாத்திரம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டதுடன் 80 கிலோ கிராம் தங்கம் இராணுவத்திடமுள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த தங்கத்தின் பெறுமதி 131 மில்லியன் ரூபா எனவும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு வரை 2222 பேரினால் அடகு வைக்கப்பட்டிருந்த வளையல்கள், மற்றும் தாலிகள் கையளிக்கப்பட்டதாக ரணில் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தகவல்கள் உறுதிசெய்யப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அநுரகுமார
இதன்போது குறுக்கிட்ட அநுரகுமார திஸாநாயக்க,
150 கிலோ கிராம் தங்கத்தில் 32 கிலோ கிராம் தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 80 கிலோ கிராம் தங்கம் இராணுவத்தினரிடம் இருந்தால் ஏனைய 40 கிலோ கிராம் தங்கத்திற்கு என்ன நடந்தது எனவும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரணில், தங்க நகைள் தொடர்பில் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் அந்த அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்குகின்றன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளியாக கால அவகாசம் தேவையென குறிப்பிட்டார்.
இதன்படி குறித்த தங்கம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக கூறியதைப் போன்று ரணில் பிரதமராக இருந்த சந்தர்பத்தில் அறிக்கைகள் முரணாக காணப்பட்டமைக்கான நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித பதில்களும் முந்தைய அரசாங்கங்கள் வழங்கவில்லை.
எனினும் தற்போதைய அரசாங்கம் தற்போது அரசாங்க நடவடிக்கைகக்காக பெறப்பட்ட தங்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது..
அவ்வாறென்றால் அநுர வெளிப்படுத்திய 40 கிலோ கிராம் தங்கம் மாயமானமை தொடர்பிலான தகவல்களை வெளிப்படத்த வேண்டும்.
அறிக்கைகளின் பின்னணி
மேலும் ரணில் வெளிப்படத்திய அறிக்கைகளின் பின்னணி மற்றும் உண்மைத்தன்மைகளை ஆராயவேண்டும்.
யுத்த காலத்தில் எவ்வளவு தங்கம் பெறப்பட்டது, அது இராணுவத்தினரால் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது, தற்போது எவ்வளவு தங்கம் கைவசம் உள்ளது, அதில் ஊழல் இடம்பெற்றுள்ளதா இல்லையா? என தற்போது சமுகத்தில் எழுந்துள்ள கேள்விகளுன்னு அரசாங்கம் பதில் வழங்கவேண்டும்.
ஆட்சிக்கு வரும் முன்னர் ஊழல் இல்லா நாட்டை உறுவாக்குவோம் என சூளுரைத்த அநுர தரப்பு உள்நாட்டு யுத்த காலத்தில் தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெறப்பட்ட நகைகள் தொடர்பில் உண்மைதன்மைகளை வெளிப்படுத்துமா என்பதை பெறுத்திருந்தே பார்க்கவேண்டும்.