வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் - மாவை தெரிவித்துள்ள விடயம்
மாகாணசபை முறைமை தொடர்பான அரசின் யோசனை மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாகவும், தேர்தலுக்கு எதிராக தென்னிலங்கையில் இனவாதப் போக்குடைய சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபை முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு யோசனை முன்வைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
