காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஏமாற்றும் அரசாங்கம்: எழுந்துள்ள விமர்சனம்

Sri Lanka Government Of Sri Lanka National People's Power - NPP
By Kajinthan Apr 15, 2025 10:06 AM GMT
Report

இலங்கையில் ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன் வைக்க முடியாத தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எவ்வாறு தீர்வை பெற்று தருவார்கள் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமர சூரிய யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உள்ளூர் பொறிமுறையின் மூலம் பெற்றுத் தருவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திலும் தென் இலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் பொறிமுறையின் மூலம் தீர்வைத் தரப்போவதாக ஊடகங்களில் கருத்துக்களை அவதானித்தோம்.

பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி

பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி

கதிரைகளை தக்கவைக்கும் முயற்சி

இறுதி யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில், இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை இராணுவத்திடம் விசாரணைக்காக கையில் கொடுத்தோம். இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என அவர்களைத் தேடி அலையும் உறவுகளுக்கு தெரியாது.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வீதி வீதியாக பல போராட்டங்களை உறவுகள் மேற்கொண்டும் இன்று வரை பொறுப்பு கூற வேண்டியவர்கள் பதில் வழங்காது மௌனம் காத்து வருகின்றனர்.

உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை தருகிறோம் என காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் வாக்குறுதிகள் வழங்கி வரும் நிலையில், அதனை நாம் துளியளவும் ஏற்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஏமாற்றும் அரசாங்கம்: எழுந்துள்ள விமர்சனம் | Government S Fake Words On Missing Person

நாம் உள்ளூர் விசாரணைகளை ஏற்க மாட்டோம் என ஜெனிவாவில் தெளிவாக கூறியது மட்டுமல்லாது சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமாகவே எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தர முடியும் என முழுமையாக நம்புகிறோம்.    

தற்போது பதவியில் உள்ள தேசிய மக்கள் சக்தி என்ற ஜேவிபி அரசாங்கம், அதன் பிரதமர் உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை பெற்று தரப் போகிறோம் என கூறுவது அவர்கள் தமது கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை உள்ளூர் விசாரணை மூலம் பெற்று தருவோம் எனக் கூறினார்கள். நாங்கள் அதை ஏற்கவும் இல்லை அது சாத்தியப்படாது என்பதும் எமக்கு நன்கு தெரியும்.

ஏமாற்றும் நாடகம்

ஏனெனில் நாம் ஐநா மனித உரிமை பேரவைக்கு செல்லும்போது ஒரே குடும்பத்தில் நான்கு பேர் காணாமல் போன சகோதர இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் ஐநாவில் நீதி கேட்டு வருகை தருகிறார்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தற்போது ஆட்சியில் உள்ள ஜேவிபி அரசாங்கம் இலங்கையில் தமது தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாத காரணத்தால் அவர்கள் இன்றும் ஐநாவில் நீதி கோரிச் செல்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஏமாற்றும் அரசாங்கம்: எழுந்துள்ள விமர்சனம் | Government S Fake Words On Missing Person

ஜேவிபியின் செயற்பாட்டாளர்களான லலித் குகன், யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இன்று வரை குற்றவாளிகள் யார் என அரச உயர் மட்டம் வரை தெரிந்த நிலையில் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜேவிபியாக முன்னர் செயற்பட்ட தமது தோழர்களுக்கான லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு என் நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை என கேட்க விரும்புகிறேன்.

ஆகவே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு கூட நீதியைப் பெற்றுத் தராத அரசாங்கமாக காணப்படுகின்ற நிலையில் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த அரசாங்கங்களை போல பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை மேற்கொண்டு வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

அம்பாறையில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

அம்பாறையில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

கருணாவை நம்பி கொழும்புக்குச் சென்ற பெண் தளபதிக்கு நேர்ந்த கதி

கருணாவை நம்பி கொழும்புக்குச் சென்ற பெண் தளபதிக்கு நேர்ந்த கதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US