தேசபந்து மீது அரசாங்கம் மேற்கொண்ட சட்டவிதிகளுக்கு எதிரான நடவடிக்கை
பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள யோசனை சட்ட விதிகளுக்கு எதிரானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியில் இருந்து நீக்குமாறு ஆளும் கட்சியின் 115 அமைச்சர்களின் கையொப்பத்துடன் கூடிய தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
பிரேரணை
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் உயர் அதிகாரிகளை நீக்கும் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 8 அல்லது 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யாரு பாருங்க Cineulagam