நடப்பு ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு
நடப்பு ஆண்டில் அரசாங்கத்தின் வரி வருமானம் எதிர்பார்த்ததை விடவும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மூவாயிரத்து நானூறு பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் ஈட்டிக் கொண்டுள்ளது.
ஈட்டப்பட்டுள்ள வருமானம்
குறித்த வருமானத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1545 பில்லியன் ரூபாவையும், இலங்கை சுங்கத் திணைக்களம் 1679 பில்லியன் ரூபாவையும், கலால் திணைக்களம் 176 பில்லியன் ரூபாவையும் வருமானமாக ஈட்டிக் கொண்டுள்ளது.
வாகன இறக்குமதிக்கான அனுமதி காரணமாகவே சுங்கத்திணைக்களம் இந்தளவு வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்நியச் செலாவணி
ஏற்றுமதி மூலமான வருமானம் 11.6 பில்லியன் டொலர்களாகவும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலமான அந்நிய செலாவணி உட்பாய்ச்சல் 5.1 பில்லியன் டொலர்களாகவும், சுற்றுலாத்துறை மூலமாக 2.29 பில்லியன் டொலர்கள் வருமானமும் அந்நியச் செலாவணி வருமான ஈட்டிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri