அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை 6441 கோடி ரூபாயாக அதிகரிப்பு
2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வருமான பற்றாக்குறையானது 6 ஆயிரத்து 441 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களில் 34395.2 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையானது 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 40836.2 கோடி ரூபாய் என குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
அரச வருமானமானது அரசின் அன்றாக செலவுகளை கூட ஈடு செய்ய முடியாத அளவுக்கு பற்றாக்குறையாக இருப்பதுடன் இந்த நிலைமையானது 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மேலும் அதிகரித்துள்ளதால், அரச வருமான பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
இந்த காலப் பகுதியில் அரசின் மொத்த வருமானம் 48172.2 கோடி ரூபாயாக இருந்ததுடன் அரசின் அன்றாட செலவுகள் 890008.5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 45217.5 கோடி ரூபாயாக காணப்பட்டதுடன் அது 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 52054.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்ளுக்கான நிதி நிலை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam