இலங்கையில் கொவிட் தடுப்பூசி அட்டை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவதற்கு தடுப்பூசி அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மாத்திரமே இந்த அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
30 வயதிற்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமில்லை என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். 30 வயதிற்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் அவர்களிடம் தடுப்பூசி அட்டை கோரப்படாதென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு செல்லும் மக்களின் தடுப்பூசி அட்டை பரிசோதிக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




