ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை விடுவிக்குமா அரசாங்கம்: சிறீதரன் எம்.பி கேள்வி
கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்த ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை இராணுவத்திடமிருந்து விடுவித்து, மீள இயக்குவதற்கு இந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறீதரன் கேள்வி
தமிழரசுக் கட்சியின் வன்னேரிக்குளம் வட்டாரக் கிளைத் தலைவர் தியாகராசா செந்தூரன் தலைமையில் ஆனைவிழுந்தானில் நடைபெற்ற கூட்டத்தில், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும் வன்னேரிக்குளம் வட்டார வேட்பாளருமான நாகேந்திரம் செல்வநாயகம், குறித்த வட்டார வேட்பாளரான சிவலிங்கம் பிறின்ஸ் சிந்துஜன், போதகர் சிவலிங்கம் சாம்சன், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன், அக்கராயன் வட்டார வேட்பாளர் தட்சிணாமூர்த்தி முரளி ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
