அரசாங்கத்தால் 16 தொன் நெல் கொள்வனவு
அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போதைக்கு வரை 16 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், அரிசியை கட்டுப்பாட்டு விலையில் சந்தையில் விற்பனை செய்யும் நோக்குடனும் நெல் சந்தைப்படுத்தல் சபை , இம்முறை கூடுதலான நெல்லைக் கொள்வனவு செய்ய தீர்மானித்திருந்தது.
நெல் கொள்வனவு திட்டம்
பெரும்போக விளைச்சலின் அறுவடை நடவடிக்கைகள் பூர்த்தியாகவுள்ள இதுவரையான காலகட்டத்தில் 16,336 கிலோ நெல்லை மட்டுமே நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய முடிந்துள்ளது.
புழுங்கல் அரிசிக்கான நெல் ஒரு கிலோவுக்கு அரசாங்க உத்தரவாத விலையாக 120 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், தனியார் வர்த்தகர்கள் அதனை 125 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதன் காரணமாக விவசாயிகள் தனியார் வர்த்தகர்களை நாடும் நிலை அதிகரித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டம் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
