நாட்டு மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க தயாராகும் அரசாங்கம்
எதிர்வரும் ஜூன் மாதத்தில் நாட்டு மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த தவணை நிதி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, பணம் கிடைத்தவுடன் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரி குறைப்பு
அதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வரி குறைப்பு ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி ஏற்கனவே பல தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
