அரச சேவையில் மற்றும் ஒரு சங்கமும் போராட்டத்துக்கு தயாராகிறது
இலங்கையின் அரச சேவையில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரைக் கொண்டிருக்கும் அபிவிருத்தி உத்தியோகா்கள் சங்கம் எதிா்வரும் நவம்பா் 8ஆம் திகதியன்று சுகவீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை நடத்த தீா்மானித்துள்ளது.
தமது வேதன உயா்வு உட்பட்ட வேதன முரண்பாடுகள் தீா்க்கப்படவேண்டும் என்றுக் கோாியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் சந்தன சூாியாராச்சி தொிவித்துள்ளாா்
1999 இல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 11 ஆயிரம் பட்டதாாிகள், 2005 இல் சேர்த்துக்கொள்ளப்பட்ட 45ஆயிரம் பட்டதாாிகள், 2012 இல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் 2021ஆம் ஆண்டில் சோ்த்துக்கொள்ளப்பட்ட 53000 பட்டதாாிகள் இந்த பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.



