செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்க பணத்தைச் அச்சிடும் அரசாங்கம் - சஜித் தெரிவிப்பு
செல்வந்தர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் பணத்தை அச்சிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட உள்ளதாக அண்மையில் பிரதமர் ரணில் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இவ்வாறு பணம் அச்சிடப்படுவது செல்வந்தர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சஜித் தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரர்கள் பில்லியன், ட்ரில்லியன் கணக்கான ரூபா வரியை செலுத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரி ஏய்ப்புச் செய்துள்ள தொகைக்கு நிகரான பணத்தை அச்சிட்டு மேலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
சில செல்வந்தர்கள் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பனவற்றில் பெருந்தொகை கடன் பெற்றுக்கொண்டு மீளச் செலுத்தவில்லை எனவும், இந்த கடன் தொகைகளை அறவீடு செய்வது கைவிடப்படுமா என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        