அமைச்சு பதவிகளிலிருந்து விமல் - கம்மன்பிலவை நீக்க தயாராகும் அரசாங்கம்
அமைச்சர் பதவிலியிருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்சவை நீக்கும் நிலைக்கு தற்போதைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இருந்த லங்கா போஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்பேட் நிறுவனம் தொழில் அமைச்சின் கீழ் இருக்க வேண்டும். அங்கு தயாரிக்கப்படும் உரங்கள் விவசாய நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொள்வதென்பது தனியான ஒரு செயற்பாடாகும். விமல் வீரவன்சவின் அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளார்.
தற்போது உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்சசை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கும் நிலைக்கு தற்போதைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
அவர்களை பதவி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
