மிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசு திட்டம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனை கூறியுள்ளார்.
படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக மனித உரிமைகள் ஆணையாளரை அழைக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அழைப்பு விடுக்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த அறிக்கை பக்கச்சார்பானது என குறிப்பிட்டுள்ள இலங்கை அரசாங்கம் அதனை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
