நிராகரிக்கப்பட்ட உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்! ஜேவிபி குற்றச்சாட்டு
இலங்கையின் அதிகாாிகளால் நிராகாிக்கப்பட்ட, சீனாவின் 96ஆயிரம் மெற்றிக்தொன் சேதன பசளையை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்காக மூன்றாம் தரப்பின் ஊடாக மற்றும் ஒரு பாிசோதனையை மேற்கொள்ள அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalintha Jayatissa) தொிவித்துள்ளாா்.
செய்தியாளா் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவா்,
இலங்கையின் இரண்டு விவசாய அமைச்சா்களும், அமைச்சின் அதிகாாிகளும் நேற்று திங்கட்கிழமை சீனத்துாதரகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில் மூன்றாம் தரப்பின் பாிசோதனையுடன் இந்த பசளையை நாட்டுக்குள் அனுமதிக்க செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.
இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் இரண்டு ஆய்வக அறிக்கைகளையும் புறக்கணித்து மற்றொரு பரிசோதனையை நடத்த இலங்கை அதிகாரிகள் இணங்கியிருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனவே இந்த விடயம் தொடா்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்
என்றும் நளிந்த ஜெயதிஸ்ஸ கோாிக்கை விடுத்துள்ளார்.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri