உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட அரசாங்கம் திட்டம்
உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பணம் வழக்கு தொடர்பான கணக்கில் வைப்பு செய்யப்பட்டு வழக்கு முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வழக்கு பொருள் வைத்திருப்பவர் வழக்கில் தோல்வி அடைந்தால், உரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
வழக்கு பொருட்கள்
வழக்கு விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் பல வழக்கு பொருட்கள் அழிவடைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சட்டங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri