விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு சென்ற அரச தரப்பு தொலைபேசி அழைப்பு
அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹன் ரத்வத்தே, ரஞ்சன் ராமநாயக்கவிடம் இதனைக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் இரவு நேரத்தில் மதுபோதையிலிருந்த ராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைபேசியை வழங்குமாறு கூறியுள்ளார்.
அப்போது ரஞ்சனுடன் பேசிய லொஹன் ரத்வத்தே, ரஞ்சனுடன் இருந்த பெண் தற்போது தன்னுடன் இருப்பதாகவும் அரசாங்கத்துடன் இணைந்தால், விடுதலை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கத்துடன் இணைந்து விடுதலையைப் பெற்றுக் கொள்ள ரஞ்சன் ராமநாயக்க தயாராக இல்லை.
அவரை அங்குணுகொல பெலஸ்ஸ சிறையில் கழிவறைகளை கழுவுதல் உட்படத் துப்பரவு பணிகளில் ஈடுபடுத்தி வருவதாக திலிப் வெத ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
