முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசு செலவிடும் பெருந்தொகை பணம்: வெளியான புதிய தகவல்

Chandrika Kumaratunga Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Maithripala Sirisena
By Vethu Nov 28, 2023 12:38 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பெறப்பட்ட PS/RTI/01/2023/205 உத்தியோகபூர்வ ஆவணம் ஊடாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், செயலர் கொடுப்பனவுகள், எரிபொருள் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் என அரசாங்கம் மாதாந்தம் 3,715,350 ரூபாவை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.

செயலாளர் கொடுப்பனவு

இத்தகவலுக்கமைய, ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கு செயலாளர் கொடுப்பனவாக 25,000 ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக 100,000 ரூபாவும் ஓய்வூதிய கொடுப்பனவாக 65,000 ரூபாவும் வழங்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசு செலவிடும் பெருந்தொகை பணம்: வெளியான புதிய தகவல் | Government Payments To Ex Presidents

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாதாந்த செயலக கொடுப்பனவாக 100,000 ரூபாவையும், எரிபொருள் கொடுப்பனவாக 679,950 ரூபாவையும், ஓய்வூதிய கொடுப்பனவாக 97,500 ரூபாவையும் பெறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயலாளர் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், எரிபொருள் கொடுப்பனவாக 679,950 ரூபாவும், ஓய்வூதிய கொடுப்பனவாக 97,500 ரூபாவும் பெறுகின்றனர்.

ஓய்வூதிய கொடுப்பனவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயலாளர் கொடுப்பனவாக 100,000 ரூபாவையும், எரிபொருள் கொடுப்பனவாக 679,950 ரூபாவையும், ஓய்வூதிய கொடுப்பனவாக 97,500 ரூபாவையும் பெறுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசு செலவிடும் பெருந்தொகை பணம்: வெளியான புதிய தகவல் | Government Payments To Ex Presidents

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு செயலாளர் கொடுப்பனவாக ரூபாய் 100,000, எரிபொருள் கொடுப்பனவாக 5 லட்சம் ரூபாய் மற்றும் ஓய்வூதிய  கொடுப்பனவாக 97,500 ரூபாய் பெறுகின்றார்.

1986இன் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அல்லது கணவரும் அவர் வாழ்நாளில் ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலர் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் வாழ்நாளில் தங்குவதற்கு ஏற்ற வீடு வாடகையே இல்லாமல் கொடுக்கப்படுகிறது.

இதுதவிர பாதுகாப்புக்காக சிலருக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாதாந்த கொடுப்பனவுகள்

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் தமது ஓய்வூதியத்தை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தாமல் குறிப்பிட்ட நிதியில் வரவு வைக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர். ஆனால், குறிப்பிட்டபடி நிதியில் அப்படி பணம் வரவு வைக்கப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் இந்த கொடுப்பனவுகளை அவர்களது தனிப்பட்ட வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைத்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசு செலவிடும் பெருந்தொகை பணம்: வெளியான புதிய தகவல் | Government Payments To Ex Presidents

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.

இந்த வரவு செலவுத் திட்டத்தின்படி, இந்த மொத்த செலவுகளுக்காக 2024 ஆம் ஆண்டிற்கு 110 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்காக 84 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US