ஆளும் கட்சியில் பிளவு! இலங்கையில் விரைவில் முத்தரப்பு அரசியல் கூட்டணி!
இலங்கையின் அரசியலில் முத்தரப்பு கூட்டணிகளின் உருவாக்கங்களை விரைவில் காணமுடியும் என்று அரசியல் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
கொழும்பின் அரசியலில் தற்போது ஆளும் கட்சிக்குள் பாரிய பிளவு நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்துக்குள் செயற்படும் பங்காளிக்கட்சிகள், தமது அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.
அத்துடன் அரசாங்கத்தின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இறுதியாக ராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவின் நடவடிக்கையை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
பொருளாதாரத்தில் கீழிறங்கியுள்ள அரசாங்கம், பொதுஜன பெரமுனவின் கட்டுக்கோப்பை தவறவிட்டு வருகிறது.
இதன் காரணமாக, அமைச்சர்களும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த அரசாங்கத்தையே விமர்சிகின்றனர்.
அத்துடன் அண்மையில் அனுரதப்புரத்தில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் மாநாட்டில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் பங்கேற்காமையானது, பங்காளிக்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசலை கோடிட்டுக் காட்டுகிறது.
எனவே பொதுஜன பெரமுன கட்சியின் உடைவை விரைவில் எதிர்பார்க்கமுடியும்.
மறுபுறத்தில், பிரதான எதிர்கட்சியான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியிலும் அதிருப்தி நிலை தோன்றியுள்ளது
கட்சியை பாரிய கூட்டணியாக உருவாக்குவது என்று சஜித் பிரேமதாசவின்; உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாமை குறித்து சிறுபான்மை கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மறுபுறுத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மற்றும் ஒரு அரசியல் அணியை திரட்டி வருகிறார் இது குறித்து அவர், ரணில் விக்கிரமசிங்க மற்றும் குமார வெல்கம ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புலனாய்வுத்தகவல்கள் கசிந்துள்ளன.
அவர், சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டபோதும் சஜித்திடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை.
மறுபுறத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தலைமையில் மற்றும் ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டு எதிர்வரும் தேர்தல் ஒன்று தனித்து போட்டியிடும் நோக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேற்கொண்டு வருகிறது.
ஜேவிபியை பொறுத்தவரையில் அது தனித்து இயங்கி, பேரம் பேசும் பாரிய கட்சியாக உருவாகி வருவதையே காணமுடிகிறது.
இந்தநிலையில் குறித்த கூட்டு உருவாக்கங்களின் வெளிப்பாடு விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியிருப்பினும் இலங்கையின் அரசியலில் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும்,ஏனைய நாடுகளின் கைகளிலேயே தங்கியிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.