வாகன இறக்குமதியில் எந்த பிரச்சினைகளும் இல்லை: அரசாங்கம் அறிவிப்பு
வாகன இறக்குமதி குறித்த அச்சங்களை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.
இந்த விடயத்தில், தேவையற்ற பயம் உருவாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அரசாங்கம் 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டிற்குள் வாகன இறக்குமதிகளை நிர்வகித்து வருகிறது.
அந்த வரம்பை அரசாங்கம் மீறவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். கவனமாக ஆய்வு செய்த பிறகு இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
மாதாந்த ஏற்ற இறக்கங்கள்
மேலும், இந்த இறக்குமதிகள் மூலம் அரசாங்கம் வரி வருவாயைப் பெறுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் வரம்பை நீக்குவது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.
எனினும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாதாந்த ஏற்ற இறக்கங்களுக்கு, அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
