போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்
சுங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றின் போதே டி.வி.சானக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் உதவி இல்லாமல் இந்த கொள்கலன்கள் எக்காலத்திலும் வெளியில் செல்ல முடியாது.
The Drug Enforcement Administration (DEA) அமெரிக்க நிறுவனம் இந்த கொள்கலன்களில் போதைப்பொருள் இருப்பதாக அறிவித்த போது இரு கொள்கலன்களும் சிவப்பு பட்டியலிடப்பட்டன. இதை நினைத்த மாத்திரத்தில் வெளியில் விட முடியாது.
முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கொள்கலன்கள் வெளியில் விடப்பட்டதென்றால் அரச தரப்பில் யாரோ ஒருவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam