அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் முதல்முறையாக வெளிவந்துள்ள பட்டியல்
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
1283 நிறுவனங்கள்
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, அரசாங்கத்தின் கீழ் 1283 நிறுவனங்கள் உள்ளன.
அவற்றில் 99 அரசு துறைகள் மற்றும் 29 அமைச்சகங்கள் என்று பட்டியல் வெளிப்படுத்துகிறது.
அத்துடன், 25 மாவட்டச் செயலகங்கள், 09 மாகாண சபைகள், 341 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திங்கட்கிழமை (14) சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதியின் பிரகாரம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
