அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாதவை ! திலித் ஜயவீர
தேசிய மக்கள் அரசாங்கத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாதவை என நாடாளுமன்ற உறுப்பினர் திலீத் ஜெயவீர(Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசியல் மேடைகளில் அளித்த வாக்குறுதிகள் வெறும் அரசியல் நோக்கத்திலானது என்பது அனைவருக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்றப்படக் கூடியவை அல்ல
எவ்வாறெனினும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படக் கூடியவை அல்ல என்பது தெளிவாக தெரிகின்றது எனவும் அவர் கூறினார்.
நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கி வருவதாகவும், வருமானம் இன்றி செலவு செய்ய முடியாது என்ற அடிப்படை கணக்கீட்டு கொள்கையை புரிந்து கொள்ளாது வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டு மக்களை தொடர்ந்தும் எதிர்பார்ப்புக்குள் மூழ்கச் செய்து அவற்றிலேயே அவர்களை வாழச் செய்வது பிழையானது. அரசாங்கம் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த அரசாங்கத்திற்கு எந்த விதமான கொள்கை திட்டமும் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் இந்த நாடாளுமன்றத்திற்கு வந்தது நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டு செல்வதற்கு அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.