புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை! வெளியாகியுள்ள தகவல்
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அத்துடன் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் அச்சம் போக்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ரணிலுடன் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு நேற்று காலை அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் வைத்து கருத்து தெரிவித்த போதே பாலித ரங்கே பண்டார குறித்த விடயத்தை கூறியுள்ளதுடன், இதன்போது இலங்கை மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் என்.விஷ்ணுகாந்தன் கருத்து தெரிவிக்கையில்,
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளனர், ஆனால் கெடுபிடிகள் தொடர்பாக பாரிய அச்சத்தில் உள்ளார்கள், விமான நிலையத்தில் கூட புலம்பெயர் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,