கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர், யுவதிகள்: நாமல் வெளியிட்ட தகவல்
தேவை ஏற்பட்டால் மட்டும் அரிசி கொள்வனவு செய்யுமாறு இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மக்களிடம் கோரிக்கை விடுக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் காத்திருந்த போது அரசாங்கம் மீது நம்பிக்கையின்றி மக்கள் இவ்வாறு காத்திருப்பதாக தேசிய மக்கள் குற்றம் சுமத்தியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்வொன்றில் நேற்றைய தினம் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அரிசி மற்றும் தேங்காய் கொள்வனவு
தற்பொழுது கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருப்பது இந்த அரசாங்கம் மீது இளைஞர், யுவதிகளுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தினாலா? என நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று அரசாங்கம் தேவை ஏற்பட்டால் மட்டும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தேவை ஏற்பட்டால் மட்டும் அரிசி மற்றும் தேங்காய் கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |