தென்னிலங்கை ஆசிரியர்கள் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அரசு

Government Protest Northern province Teachers
By Independent Writer Sep 19, 2021 07:30 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

தென்னிலங்கையிலே ஒரு இனவாதத்தைத் தூண்டும் என்ற வகையிலே வடக்கிலும் கிழக்கிலும் சுமுகமாகக் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தென்னிலங்கை ஆசிரியர்கள் தான் தெற்கிலே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துச் செயற்படுவதாகவும் இந்த அரசு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளது என ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் திலீபன் தீசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. இந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது,

இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. 1 தென்னிலங்கையிலே ஒரு இனவாதத்தைத் தூண்டும் என்ற வகையிலே வடக்கிலும் கிழக்கிலும் சுமுகமாகக் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தென்னிலங்கை ஆசிரியர்கள்தான் தெற்கிலே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துச் செயற்படுவதாகவும் இந்த அரசு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளது.

இதனை முற்று முழுதாக மறுக்கின்ற கோணத்திலேயே இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறது. வடக்கைப் பொறுத்தவரையில் எந்தவிதமான ஒன்லைன் கல்வி முறைகளும் இடம்பெறுவதில்லை.

ஆசிரியர்கள் முழுமையாக ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கத்துக்கு ஆதரவு வழங்குவதோடு, சுயமாகவே தங்களுடைய பாடசாலை ஆசிரியர் சங்கங்கள் ஊடாகவே ஆசிரியர்கள் குழுக்கள் இணைந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதோடு, ஆசிரியர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு முற்று முழுதாக தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையிலேயே ஒரு பொய்யான பிரச்சாரத்தை தெற்கிலே செய்து வடக்கு கிழக்கில் ஓன்லைன் மூலம் கேள்விகள் இடம்பெறுவதாகவும், திட்டமிட்டு கல்வி புறக்கணிக்கப்படுவது ஆகவும் இனவாதத்தைத் தூண்டும் வகையில் அரசதரப்பு மேற்கொண்டுள்ளது.

ஒரு சூழ்ச்சி நிறைந்த செயற்பாடாக அமைந்த இதன் மூலம் இந்த அதிபர் ஆசிரியர் சங்க தொழிற்சங்க போராட்டத்திற்கு எதிராகத் தென்னிலங்கையில் உள்ள பெற்றோர்களையும் மாணவர்களையும் தூண்டுகின்ற ஒரு நோக்கத்திற்காகத் தான் இந்த செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த விடயத்தை ஆரம்பத்திலிருந்து நீங்கள் பார்க்கலாம். எல்லா மாவட்டங்களிலும் மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளாக இந்த தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே இத்தகைய பிரச்சாரத்தைத் தான் இந்த அரசு மேற்கொண்டிருந்தது.

அதாவது வடக்கு கிழக்கில் எந்தவிதமான ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவில்லை. தென்னிலங்கையில் மட்டும்தான் இடம்பெறுகிறது.

அங்கு அவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்ற கோணத்தில் சொல்லிக் கொண்டிருந்த வேளையிலே வடக்கு-கிழக்கில் நாங்கள் ஆர்ப்பாட்டம் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் தங்களுடைய பொய் பிரச்சாரங்கள் பொய்யாகப் போகின்றதே என்பதைக் கருத்திற்கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் இடம்பெறாத வகையில் அதனை நசுக்க தொடங்கினார்கள்.

அரச புலனாய்வாளர்களும், பொலிஸாராலும், பொதுச் சுகாதார பரிசோதகர்களாலும் எங்களுக்குப் பல நெருக்குவாரங்கள் தரப்பட்டிருந்தன. அனைவருக்கும் தெரியும் ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் தடை உத்தரவைக் கூறி பொலிஸார் சென்றிருந்தனர். அதற்கு நீதவான் அனுமதி வழங்கவில்லை.

அதன் காரணமாக அவர்கள் எங்களைக் கைது செய்வதற்காக வந்து நடந்து கொண்ட விதம் தொடர்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே எங்களைக் கைது செய்ய முடியாத ஒரு சூழலில் கடைசியாக அவர்கள் மேற்கொண்ட ஒரு ஆயுதம், அதாவது எங்களை நெருக்குகின்ற வட கிழக்கில் இருக்கின்ற ஆசிரியர் சமுதாயத்தை அச்சுறுத்துகின்ற கோணத்திலேயே அவர்கள் செய்த ஒரே ஒரு விடயம் பேரணியில் கலந்து கொண்ட வாகனத்தைத் தடுத்து நிறுத்தி 15 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு அதனை நாங்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆகவே அவர்கள் மேற்கொண்ட பொய் பிரச்சாரங்களை உண்மையாக்க இந்த விடயங்கள் நடந்தது.

இதேபோன்று தான் இன்றும் வடக்கிலே ஆராய்ந்து பார்த்தோமானால் இவ்வளவு விகிதம் ஒன்லைன் கல்விமுறை இடம் பெறுகின்றது என்பது உங்களுக்கே தெரியும். ஆனாலும் அவர்கள் போலியான பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இதன் மூலம் எங்களுடைய போராட்டத்தை வந்து நசுக்க முடியாது. நாங்கள் இலங்கை முழுவதும் இருக்கின்ற ஆசிரியை அதிபர்கள் 24 வருடமாக இருக்கின்ற உங்களுடைய சம்பள முரண்பாடு போன்ற எங்களுடைய அடிப்படை உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இனவாதத்தைத் தூண்டி இந்த ஆசிரியர்களுடைய போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்கின்ற இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுதான் இங்கு நாங்கள் முதன்மையாகப் பார்க்க வேண்டிய விடயம் . இரண்டாவது விடயம்.

இந்த 5000 ரூபாய் கொடுப்பனவு என்பது ஆசிரியர்களுக்கு இலஞ்சம் வழங்குகின்ற ஒரு செயற்பாடாகத் தான் நாங்கள் பார்க்கவேண்டும். அதாவது நாங்கள் கேட்பது இந்த அரசாங்கம் பெப்ரவரி மாதம் ஆணைக்குழுவை நியமித்து சுபோதினி ஆணைக்குழுவின் ஊடாக அதனை அங்கீகரித்து நீங்கள் இந்த ஆசிரியர் அதிபர் முரண்பாடு தொடர்பாக அதனை நீக்குவது தொடர்பானதையே நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அதற்கு அரசாங்கம் என்ற வகையில் நீங்கள் உங்களுடைய போராட்டம் உச்சம் பெற்று இருக்கின்ற நிலையில் பல்வேறு அமைச்சரவை தீர்மானங்கள் ஊடாக பல தடவை ஆராயப்பட்டு அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்து இருந்தீர்கள். அமைச்சரவை உப குழு இடைக்கால கொடுப்பனவை வழங்க முன்மொழிந்திருந்தது.

அந்த அமைச்சரவை உப குழு இடைக்கால கொடுப்பனவை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நிலையில் போதனை அழைக்கையில் உடைய ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த இடத்திலும் அந்தக் இடைக்கால கொடுப்பனவை நான்கு வருடங்களாகத் தான் பிரித்துக் கொடுப்போம் என அரசாங்கம் தெரிவித்தது.

அந்த இடத்தில் நாங்கள் இந்த கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லுகின்ற தருணத்தில் இன்று என்ன சொல்லுகிறார்கள் என்றால் இணைய வழிக் கற்பித்தலை ஆசிரியர்கள் முழுமையாகப் புறக்கணித்து இருக்கின்ற நிலையில் இணைய வழிக் கற்பித்தலைச் செய்கின்ற ஆசிரியர்களுக்கு மாத்திரமே தாங்கள் 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவோம் என்று சொல்வது அது ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தை நீத்துப்போவதற்கு ஒன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் 5,000 ரூபாய் வழங்குவோம் என்பது அரசாங்கத்தினுடைய ஒரு அடிமட்ட சிந்தனையை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த அரசாங்கம் பல ஊழல்களோடு தொடர்புடைய ஒரு அரசாங்கம் , ஆகவே இவ்வாறான ஒரு அரசாங்கம் ஆசிரியர்களுக்கு 5000 ரூபாய் வழங்கி அவர்களுடைய போராட்டத்தை மழுங்கடிப்பதற்குத் துணைபோகின்றது. ஆகவே ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நமது பார்வை இவ்வாறாக அமைந்துள்ளது.

இலஞ்சம் ஊழல்களை முன்னெடுத்த ஆளுநருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக 19 கோடி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இலஞ்ச ஊழலில் ஈடுபட்ட ஆளுநருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு இந்த அமைச்சரவை 19 கோடி ரூபாயை வழங்குவதற்கு அனுமதி வழங்குகின்றது.

அப்படி என்றால் இந்த அரசாங்கமும் அந்த ஆளுநருடன் இணைந்து பல சுரண்டல்களைச் சுரண்டி இருப்பது வெளிச்சத்திற்கு வருகின்றது. ஒரு ஊழல் மோசடியில் ஈடுபட்டவருக்கு 19 கோடி ரூபாயை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது.

இவ்வாறாக இலஞ்சம் ஊழல் மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் எங்களுடைய உண்மையான பிரச்சினையை விளங்கிக் கொள்ளாமல் ஒரு 5000 ரூபாய் பிச்சை கொடுப்பனவு போல வழங்கி இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போக இந்த அரசாங்கம் துடிக்கிறது என்றால் , ஆசிரியர்கள் நாங்கள் பரந்துபட்ட வகையில் சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம்.

இந்த அரசு வழங்குகின்ற இந்த 5,000 ரூபாய் பிச்சை கொடுப்பனவிற்கு அல்லது இலஞ்சத்திற்கு நாங்கள் இந்த போராட்டத்தை விட்டுக்கொடுக்கப் போகின்றோமா என்பதுதான் பிரதானமாக விடயமாகும்.

இந்தப் பிரச்சனை சரியான ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது, சுபோதினி குழுவின் அறிக்கை வந்து, இடைக்கால சம்பளம் கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் எமது போராட்டம் ஒரு முக்கியமான இடத்தில் உள்ளது மேலும் நாம் அடையவேண்டிய நோக்கம் என்பது மிக அருகிலேயே உள்ளது.

ஆகவே இந்த இருபத்தி நான்கு வருட முரண்பாட்டில் நாங்கள் பலதடவைகள் ஏமாந்திருக்கின்றோம். இனியும் தொடர்ந்து நாங்கள் ஏமாறத் தயாரில்லை. இந்த மக்களும் பெற்றோரும் சமூக தரப்புக்களும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.

24 வருடமாகத் திட்டமிட்டு தன்னுடைய உரிமைக்காக தங்களுடைய நலனுக்காகப் பாதிக்கப்பட்ட இந்த ஆசிரியர்கள் ஒரு சமூக நலனுக்காக தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்று சொன்னால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது.

நாங்கள் ஒரு மாணவர் சமுதாயத்திற்கோ அல்லது இந்த சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க முடியுமா என்றொரு கேள்வியை நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும். வெறுமனே இது ஒரு மாணவர்களின் கல்வி பாதிப்பு என்று இன்று நாங்கள் நினைத்தால் நாளை இந்த ஆசிரியர் தொழிலுக்கு எவருமே வரப்போவதில்லை.

சொன்னால் இந்த சமுதாயத்தைக் கட்டி வளர்க்கின்ற இந்த ஆசிரியர் தொழிலில் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளது. மிக மோசமான சம்பளப் பிரச்சினைகள் இருக்கிறது, செய்யும் தொழிலுக்கேற்ற கொடுப்பனவு இல்லை. இந்த இடத்திற்கு இன்னுமொரு ஆசிரியர் சமுதாயம் வராது போனால் ஒட்டுமொத்த இனமும் பாதாளத்தில் தள்ளப் போகிறது.

ஆகவே மாணவர்களும் பெற்றோர்களும் இந்த ஆசிரியர்களினுடைய நிலையை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் மேலும் இந்த அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற அற்பத்தனமான 5,000 ரூபாய் கொடுப்பனவை ஆசிரியர்கள் நம்பி இந்த போராட்டத்திலிருந்து விலகாது எங்களுடைய இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு எங்களுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, Freiburg, Germany

23 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி

25 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உமையாள்புரம்

26 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

26 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனகராயன்குளம், Toronto, Canada, பெரியகுளம்

30 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், Saint-Denis, France

28 Dec, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Toronto, Canada

26 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, பக்ரைன், Bahrain, Maryland, United States

25 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வேலணை 5ம் வட்டாரம், Markham, Canada

25 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US