அரசாங்கம் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது! நாமல் விசனம்
அரசாங்கம் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து படைவீரர்கள், தொழிற்சங்கங்கள், அரச ஊழியர்கள் மற்றும் தேசிய இயக்கங்கள் என்பனவற்றை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறை..
தொழிற்சங்கங்களையும் படைவீரர்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதனை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்கள் வேட்டையாடப்படுவதனை முற்றிலுமாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் எந்தக் காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாது அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ள தாம் பூரண ஆயத்த நிலையில் இருப்பதாக நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.



