அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு தற்பொழுது அம்பலமாகியுள்ளது
அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு தற்பொழுது அம்பலமாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்த இந்த அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் நட்பு உறவாடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது இந்த அரசாங்கத்திற்கு மோடி நல்லவராகவும் காந்தி கெட்டவராகவும் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் இப்பொழுதுதான் இந்த அரசாங்கத்தின் அங்கம் வகிப்பவர்களது உண்மை முகம் வெளிப்பட்டு உள்ளது எனவும் இவர்களது இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டி உள்ளார்.
தற்பொழுது அரசாங்கத்தில் இருப்பவர்கள் தலை மயிருக்கு டை அடிப்பதாகவும் அவர்களுக்கு பெரிய தொப்பை வந்துள்ளதாகவும், வீ8 வாகனங்களில் அவர்கள் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இவை அனைத்தையும் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் தற்போதைய சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்பட்டு வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது பொருத்தமற்ற நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிமல் ரத்நாயக்கவின் கண் அசைவிற்கு சபாநாயகர் செயல்படுகின்றார் எனவும், அவர் எழுந்தாலே அவரது மைக் ஒன் செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பதவிக்கு பிரதி சபாநாயகர் பொருத்தமானவர் எனவும் அவரது ஆளுமை கூட சபாநயாகருக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் ஆணையை பிழையாக பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறியவர்களும் இதேபோன்று துள்ளியதாகவும் இறுதியில் அவர்களுக்கு நடந்ததனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு மக்களினால் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் வழங்கிய ஆணையை அரசாங்கம், எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கும் முடக்குவதற்கும் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam