நாட்டின் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு
நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைத்துள்ளமைக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே மாத இறுதியில் இந்தியா வழங்கிய கடன் நிதி முடிந்து போகும் என்பதுடன் அந்நிய செலாவணி இல்லாத காரணத்தினால், எதிர்வரும் ஜூன் மாதமளவில் தனியார் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை உருவாகும்.
அரசாங்கம் தற்போது எவ்வித நிபந்தனைகளும் இன்றி நெருக்கடியில் இருந்து மீள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளையும் சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலைமையில், தேர்தலோ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ நாட்டின் நெருக்கடி தீர்வாக அமையாது.
நெருக்கடியை தீர்க்க முடியும் அதற்கு தேசிய கொள்கை ஒன்று அவசியம் எனவும் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் கூறியுள்ளார்.