தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கம் காரணம் அல்ல! - நிதி அமைச்சர் பசில்
தற்போதைய நெருக்கடியை தணித்து மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு அரசாங்கத்தின் பங்கு காரணமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடி இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நிலைமைகள் காரணமாக அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்படுவதனால் எமது நாட்டிற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்ட போர் நெருக்கடி ஆகியவை எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவான தீர்வு காண பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தலைமையில் ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
